MARC காட்சி

Back
பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்)
000 : nam a22 7a 4500
008 : 200522b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்)
300 : _ _ |a நடுகல் சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

          தன் ஊரையும், மக்களையும், பயிர்களையும், கால்நடைகளையும் காக்கும் பொருட்டு கொடிய காட்டுப்பன்றியினை தன் கூரிய நீண்ட வேலால் குத்திக் கொன்று அதன் கொடிய தாக்குதலால் தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். பாய்ந்து வரும் பன்றியை தாக்கும் நிலையில் வீரன் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளான். இடையில் குறுவாள் தொங்குகிறது. அரையாடை உடுத்தி, கைகளில் வளை, கால்களில் வீரக்கழல்கள் அணிந்துள்ள இவ்வீரனின் நீள்செவிகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. வீரனின் வலப்புறம் அவனோடு உயிர்நீத்த சதிப்பெண்ணான அவன் மனைவி நிற்கிறாள். அவன் மனைவி முழங்கால் வரையிலான ஆடை உடுத்தி, வலது கையை இடையில் வைத்துள்ளாள். இடது கையில் தன் வீரமிகு கணவனுக்கான மதுக்குடுவையைப் பிடித்துள்ளாள். வீரன் மையமாக பெரிய உருவளவில் காட்டப்பட்டுள்ளான்.

520 : _ _ |a

         தருமபுரி மாவட்டத்தில் பாகலஹள்ளி என்னும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகில் திறந்த வெளியில் சில நடுகற்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நடுகல் கொடிய காட்டுப்பன்றியை குத்திக் கொன்று தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நினைவுக்கல்லாகும். இக்கல் பன்றிக்குத்திப் பட்டான் கல் என்று அழைக்கப்படும். இந்த நடுகல்லில் அவனோடு சேர்ந்து உயிர் துறந்த அவனது மனைவியும் சிறப்பிக்கப்பட்டுள்ளாள்.

653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, சதிக்கல், பாகலஹள்ளி, கிருஷ்ணகிரி, சென்றாயப் பெருமாள் கோயில், பன்றிக்குத்திப் பட்டான் கல்
700 : _ _ |a திரு.வேலுதரன்
752 : _ _ |a பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில் |b பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில் |c பாகலஹள்ளி |d தருமபுரி |f தருமபுரி
850 : _ _ |a பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.05698994
915 : _ _ |a 78.11835051
995 : _ _ |a TVA_SCL_001548
barcode : TVA_SCL_001548
book category : கற்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001548/TVA_SCL_001548_தருமபுரி_பகலஹள்ளி-குறும்பர்மண்டு_நடுகல்-001.jpg :
Primary File :

TVA_SCL_001548/TVA_SCL_001548_தருமபுரி_பகலஹள்ளி-குறும்பர்மண்டு_நடுகல்-001.jpg